Saturday, April 1, 2017

இப்போ நம்ம வூட்டு பிள்ளைகள் மதிப்பெண்களை குவித்தால், என்னய்யா இது மார்க் எடுக்கிற மெஷின் மாதிரி பிள்ளைகளை வளர்க்குறாய்ங்க என்கிறார்கள்

நாமக்கல் மற்றும் தமிழகத்தின்
பிற பகுதிகளில் இயங்கும்
Concentration camp பாணியிலான
பள்ளிகளை நான் ஆதரிக்கிறேன்
(அல்லது வெறுக்கவில்லை).

அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு
பிறவி தகுதி, பிறவி திறமை
எதுவும் தேவையில்லை, முறையான
பயிற்சியும், தேவையான உழைப்பும்
இருந்தால் யார் வேண்டுமானாலும்
அதிக மதிப்பெண்கள் பெறலாம்
என்பதை நிருபித்துக் காட்டியிருக்கின்றன
இந்த பள்ளிகள்.

அவா ஆத்து பிள்ளைகள் நூற்றுக்கு
நூறு மதிப்பெண்கள் எடுத்த
காலத்தில், திறமையை பாருங்க,
தகுதியை பாருங்க என்று பேசியவர்கள்...
இப்போ நம்ம வூட்டு பிள்ளைகள்
மதிப்பெண்களை குவித்தால்,
என்னய்யா இது மார்க் எடுக்கிற
மெஷின் மாதிரி பிள்ளைகளை
வளர்க்குறாய்ங்க என்கிறார்கள் .

- பிரபா அழகர்

No comments:

Post a Comment