Saturday, April 1, 2017

அயம் நாட் ய டமிலியன் பிரதர் - 2:

அயம் நாட் ய டமிலியன் பிரதர் - 2:
.
தமிழர்கள் என்பதற்கு இந்து முன்னனி கொடுக்கிற இரண்டாவது வரையறை 'கழுத்தில் தாலி அணிபவர்கள் '.
.
இந்த வாக்கியத்தை படிக்கும்போதே இது குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து சொல்லப்பட்டதென்பது நமக்கு புரியும். சரி, தமிழர்கள் எல்லோரும் தாலி அணிந்து கொண்டிருந்தார்களா?
.
எப்போது யாரால் இந்த பழக்கம் ஏற்பட்டதென்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்குள்ளும் ஆரிய நரி ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.
.
நான் ஏற்கனவே சொன்னது போல் அதிகம் படித்தவனோ அல்லது சங் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனோ இல்லையென்றாலும் கூட எந்த பழந்தமிழ் நூலிலும் தமிழர்கள் தாலி அணிந்து திருமணம் செய்தார்கள் என்பதான குறிப்பெதையும் பார்க்கவே முடியவில்லை.
.
நோகாமல் வயிறு வளர்க்க ஆரியர்கள் கண்டுபிடித்த ஆயிரத்தெட்டு சடங்கு சம்பிராதயங்களில் ஒன்று தான் இந்த தாலி அணியும் பழக்கமும். வாயு பகவானுக்கு, அக்கினி பகவானுக்கு, சூரிய பகவானுக்கெல்லாம் மனைவியாய் இருந்தவளே, இன்று முதல் நீ இன்னாருடைய மனைவி என ஏலம் விடுவதை வேத மந்திரம் என கப்சா விட்டு காசு பார்க்க திட்டமிட்டதன் விளைவு தான் இந்த தாலி பழக்கம்.
.
பொதி மாட்டுக்கு நுகத்தடி புனிதமென்பது போல் பெண்களுக்கு தாலியை புனிதமாக கற்பிதம் செய்து விட்டார்கள். பெண்மை, தாய்மை புனிதமென்பதும் கூட பெண்ணை பெருமைப்படுத்தவா ஏற்படுத்தப்பட்டது? தாலி அணிபவர்கள் தான் தமிழர்கள் என்பது இனத்தை மதத்தோடு பிணைக்கிற இந்துத்துவ குறுக்குபுத்தி அல்லாமல் வேறு என்ன?
.
மூன்றாவது பாயிண்ட்டை படித்ததும் தான், அட ச்சே, இதை போய் சீரியஸ் பேட்டி னு நெனச்சுட்டமே.. டைம் பாஸ் ல வரவேண்டிய காமெடி பேட்டி ஆச்சே என்பது என் மர மண்டைக்கு உறைக்க ஆரம்பித்தது. அது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது.
.
தொடரும்...
.
Leo Joseph

No comments:

Post a Comment