Thursday, April 6, 2017

மாட்டிறைச்சியும் சுவாமி விவேகானந்தரும்

மாட்டிறைச்சியும் சுவாமி விவேகானந்தரும்

“என் ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர் காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது..!"

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4.)

-----
மாட்டரசியல் செய்யும் இந்துத்வ கும்பல் கவனத்திற்கு
வேதகாலக் கடவுளர்களிலேயே மிகப்பெரிய கடவுளான இந்திரனுக்கு படைக்க எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் அடிக்கடி குறிப்பிடுகிறது. ‘’அவர்கள் எனக்காக பதினைந்து, இருபது எருதுகளை சமைத்தார்கள்..! என்று ஓரிடத்திலும் (ரிக்வேதம் X,86. 14ab.) பசுமாட்டு காளைகளை உண்டதாக மற்றோர் இடத்திலும் இந்திரன் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (ரிக்வேதம் X.28.3c.)

-----

கோமாதா காவலர்கள் கவனத்திற்கு
இந்திரனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொண்ட அக்னிக்கு, “எருதும், மலட்டுப் பசுவுமே அவனது உணவாக இருந்தன..!” என்று ரிக்வேதம் குறிப்பிடுகிறது. (ரிக்வேதம் VIII 43.11.) குதிரைகள் (அஸ்வம்), காளைகள் (ரிஷபம்), எருதுகள் (உக்ஷன்) மலட்டு பசுக்கள் (வசு), ஆட்டுக்கடா (மேஷம்), போன்றவை அக்னி தேவனுக்கு பலியாக தரப்பட்டதாக ரிக்வேதம் இயம்புகிறது. (ரிக்வேதம் X.91.14.ab.)

---

இந்திய தொல்லியல் ஆய்வுப்பணிகளை ஆழ்ந்த சம்ஸ்கிருத புலமையோடு ஒன்றிணைத்த ஹெச். டி. சங்காலியா, பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணப்பட்டு வந்ததற்கு இலக்கிய, தொல்லியல் ஆதாரங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார். (‘வரலாற்றில் பசு’ ஹெச். டி. சங்காலியா, செமினார், 93 (1967).)

---

பசுவதை சட்டம் இயற்றும் காவிக்கும்பல் கவனத்திற்கு
மகாமகோபாத்யாயா பி.வி. கானே எனும் பாரதரத்னா பட்டம் பெற்ற ஒரே சமஸ்கிருத அறிஞர், வைதீக மராட்டிய பார்ப்பனர். அவர் 1940களில் ‘தர்மசாஸ்திரங்களின் வரலாறு’ என்ற அழியாப்புகழ் கொண்ட ஐந்து தொகுப்புகளை வெளியிட்டார். அதில் பசு வதை குறித்தும், மாட்டிறைச்சி பரவலாக உண்டு வந்தது குறித்தும் வேதம் மற்றும் தர்மசாஸ்திர நூல்களிலிருந்து ஆதாரங்களை அடுக்கியிருந்தார். (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம் 22

---

என் முகநூல் நட்பு வட்டாரத்தில் இருக்கும் எம் உடன் பிறவா #இந்து_சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடத்தில், நம் நாட்டில் நடக்கும் பிரச்சனையை வைத்து முக்கியமான ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.!?

இந்த கேள்வி சரியா.? தவறா.? என்று எனக்கு தெரியவில்லை சரியான கேள்வி என்றால் பதில் தரவும் தவறான கேள்வியாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.!!

நம் நாட்டில் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது என்று குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், ஹரியானா, சட்டிஸ்கர், உத்தர்காண்ட், உத்தரபிரதேஷ், போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடை செய்தும் சாப்பிடுபவர்களை தடுத்தும், பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்தும் வருகிறார்கள்.!

ஆனால் இவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவது இந்து மதத்திற்கு எதிரானது என்றே தடை செய்கிறார்கள்.!! எனவே எனது கேள்வியானது இந்து மதத்தில்
மாட்டு இறைச்சி சாப்பிடுவது குற்றமா.!?

சாப்பிட கூடாது என்று இந்து மதவேதங்களில் சொல்லி உள்ளதா.!?

அப்படி மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை கொல்ல சொல்லி எதும் வேதத்தில் உள்ளதா என்று விளக்கவும்.!?

குறிப்பாக இங்கு முஸ்லீம்கள் பதில் அளிக்க வேண்டாம், தலைப்புக்கு சம்மந்தமாக மட்டுமே பேச வேண்டும். வரம்பு மீறி பேசிட வேண்டாம்.!! சில தெளிவுக்காக மட்டுமே எனது கேள்வியே தவிர யாரையும் கொச்சை படுத்தும் நோக்கத்தோடு அல்ல.!

---

ஈமசடங்கின் போது கொல்லப்பட்ட விலங்கு அனுஷ்டாரனி என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் பசு அல்லது பெட்டை வெள்ளாடு என்பது சமஸ்கிருத அறிஞர் மகாமகோபாத்யாயா பி.வி. கானேயின் கருத்து. (பார்க்க; அவரது நூல் ‘தர்மசாஸ்திரங்களின் வரலாறு’ பக்கம் 206. அனுஷ்டாரனி பசு என்பது பொதுவாக கன்று ஈனாத பசுதான் என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. டபுள்யு. நார்மன் பிரவுன், THE SANCTITY OF THE COW IN HINDUISM, மெட்ராஸ் யுனிவெர்சிட்டி ஜெர்னல், XXVIII, எண்.2, 1957, பக்கம்.33.)

-----

இந்து மதத்தின் பெயரால் மாட்டுக்காக மனிதனை கொல்லும் யோகி வகையறாக்கள் கவனத்திற்கு பசுவைக் கொன்று, யாகங்கள்.! (யஜுர் வேதத்தில்)

1. கோஸவம். (பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்)
2. வாயவீய ஸ்வேதபக. (வாயு வேதனைக்காக வெள்ளைப்பசு யாகம்)
3. லத்ஸோப கரணம். (கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.)
4. அஷ்டதச பசு விதானம். (பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்)
5. ஏகாதசீன பசுவிதானம். (பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்)
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா. (நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்).
7. உபாகரண மந்திரம். (யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்).
8. கவ்ய பசுவிதானம். (பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்)
9. ஆதித்ய தேவ தாகபசு. (சூரிய தேவதைக்கு பசு யாகம்)

-சிவானந்த சரஸ்வதி. 'மத விசாரணை நூல்.' பக்கம்-79,80.

---

பசுவதை எனக்கூறும் இந்துத்வ கும்பல் கவனத்திற்கு

“முன்னோர்களின் ஆவிகள் மாட்டிறைச்சியைக் கண்டு பெரிதும் மகிழ்கின்றன..!” என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (II.7.16.25) சொல்கிறது.

இறந்துப் போனவரின் உறவினர்கள், மரணத்திற்குப் பிறகு பதினொன்றாம் நாள் பார்ப்பனர்களுக்கு இறைச்சி விருந்து தர வேண்டும் என்று பராஷ்கர கிரக சூத்திரம் சொல்கிறது. மரணமடைந்தவரை கவுரவிக்க பசுவும் பலி தரப்பட வேண்டும். ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (III.10.48.9)

----

பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதித்த குசராத் மூடர்கள் கவனத்திற்கு

தனக்குப் பிறக்கும் மகன் நீண்ட ஆயுளும்,நல்ல அறிவும் கொண்டவனாக இருக்கவேண்டுமென்று விரும்பினால் அவர்கள் வேகவைத்த கன்றின் இறைச்சியுடன் அல்லது மாட்டிறைச்சியுடன் (அல்லது வேறு ஏதாவது இறைச்சியுடன்) அரிசிச் சோறும், நெய்யும் கலந்து உண்ண வேண்டும் என பிரகத் ஆரண்யக (உபநிடதம் VI.4.18) சொல்கிறது.

----

சங்பரிவாரங்கள் போற்றும் துறவி சுவாமி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். 

‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். “நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்கவழக்கத்தின் படி மாட்டுக்கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல..!” (He is not a good Hindu who does not eat beef) (தொகுதி-3. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ 1900ஆண்டு பிப்.2 அன்று ஆற்றிய உரை.)

-----

‘(குதிரை வேள்விகளில்) அவர் (Adhvaryu) பசுவை (அதாவது பசுக்களை) பிடித்துக் கொள்கிறார். பசுதான் படையல் பொருள். (இதன் பயனாக) அவர் (வேள்வி நடத்துபவர்) படையல் பொருளை அடைந்து விட்டார். நிச்சயமாக பசு உணவுப் பொருள் தான். (இறுதியாக) இவர் இவ்விதமாகப் பெறுவது உணவுப் பொருளே.!” (‘’.gam alabhate; yajno vai gauh; yajnam eva labhate; atho annam vai gaub; annam evavarundhe..’’ (Taittiriya Brahmana, III,9.8.2-3 (Anandasrama – Sanskritgranthavalih 37, vol.III,3rd edu., Poona.1979) English translation by Paul-Emile Dumont., Proceedings of the American Philosophical Society, 92.6 (December 1948), p.485.)



No comments:

Post a Comment