Sunday, April 2, 2017

"அடிக்கல் நாட்டு விழா" என்ற பெயரில் நடந்திருக்கும் "பூமி பூஜை"

"புது வீடு கட்டுவது" என்பது மகிழ்ச்சியான, அற்புதமான தருணம். ஜமீமா மற்றும் அவரது  குடும்பத்தார்களின் இந்த சந்தோசமான நிகழ்வு நல்லபடியாக முடிவதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆனால், "அடிக்கல் நாட்டு விழா" என்ற பெயரில் நடந்திருக்கும் "பூமி பூஜை" தான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது.

இது போன்ற "சந்தோசமான நிகழ்வின் போது" இதுபோன்ற "விசயங்களை பேச வேண்டாம்" - என்று நினைத்து உண்டு.

ஆனால், நமது கும்பத்தார்கள் இந்த தவறை திரும்ப திரும்ப செய்வதால், "நன்மையை ஏவு, தீமையை தடு" என்ற அடிப்படையில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டியுள்ளது.

வீடு என்பது நமது அடையாளம். நாமும் நமது சந்ததிகளும் காலங்காலமாக சந்தோசமாகவும், நிம்மதியாகவும் முக்கியமாக அல்லாஹ்வின் பரக்கத்தை பெற்று வாழ வேண்டிய இடம்.

நாம் வாழ்கின்ற வீட்டில் உருவப்படம் இருந்தால் "அல்லாஹ்வின் பரக்கத்திற்கான மலக்குகள்", நம் வீட்டிற்குள் வர மாட்டார்கள். "பரக்கத்தோட மலக்குகள் நமது வீட்டிற்கு வரமாட்டார்கள்" - என்பது நிச்சயமாக மிகப்பெரிய நஷ்டம்தான், கைசேதம்தான்.

ஒரு சாதாரண உருவப்படம் வைத்திருப்பதற்கே இதுதான் நிலைமை என்றால். மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளை  அடிப்படையாக கொண்ட "பூமி பூஜை"-யை தொடக்கமாக கொண்டு கட்டப்படும் வீட்டிற்கு "அல்லாஹ்வின் பரக்கத்திற்கான மலக்குகள்" எவ்வாறு வருவார்கள்.

இது பூமி பூஜையோடு முடியாது, "வாசக்கால் ஊண்றுதல் முதல் சென்டிங் அடிப்பது வரை தொடரலாம்". (சேவற்கோழியின் ரத்தத்தை சுவர்களில், கதவுகளிலும் தடவுவார்கள்).

பெரும்பாலும் இக்காரியங்களை நாம் நமது விருப்பத்தின் பெயரில் செய்வதில்லை. "கொத்தனார்/ஆசாரி சொன்னார்" - என்றுதான்  செய்கின்றோம்.

"நம் ரத்தத்தை வேர்வையாக சிந்தி சம்பாதித்த பணத்தில், நமக்காக நாம் கட்டும் வீட்டிற்கு என்ன செய்ய வேண்டும்" - என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்மிடம் பணம் வாங்கி நமக்காக வேலை செய்யும் கொத்தனாரோ/ஆசாரியோ அல்ல.

ஜமீமா, நிச்சயமாக நீங்களும் அண்ணனும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு தூஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் பெருங் கருணையாளன். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து நமக்கு பரக்கத் செய்ய அவனே போதுமானவன்.

இதற்குமுன் இதே தவறை செய்தவர்களும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு அவனது பரக்கத்திற்கான தூஆ செய்வோம்.

இனிவரும் காலங்களில், வீடுகட்ட உத்தேசித்துள்ளவர்கள் இதுபோன்ற தவறுகளிலிருந்து விலகியிருக்க அல்லாஹ் உதவிசெய்வானாக என்று பிராத்திப்போம்.

No comments:

Post a Comment