Saturday, April 1, 2017

ஐயம் எழத் தொடங்காதவரை முன்னேற்றம் ஏற்பட முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.

ஐயம் எழத் தொடங்காதவரை முன்னேற்றம் ஏற்பட முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.
.
நாகரிகத்தின் முன்னேற்றம் முற்றிலுமாக மனித அறிவு பெறுகின்ற வளங்களையும், அந்த வளங்கள் எந்த அளவுக்கு மக்களிடையே பரப்பப்படுகின்றன என்பதையும் பொறுத்தது.
.
ஆனால், தங்களது சொந்த அறிவைப் பற்றி முழுமையாகத் திருப்தியடைந்திருப்பவர்கள் அதை வளர்க்க ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டார்கள்.
.
தங்களுடைய கருத்துக்கள் சரியானவை என்று முழுமையாக நம்புகின்றவர்கள் அவற்றின் அடிப்படையை ஆராய முயல மாட்டார்கள்.
.
தங்கள் தந்தையர்களிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை அவர்கள் வியப்புடனும் பல சமயங்களில் வெறுப்புடனும் பார்க்கிறார்கள்.
.
அவர்கள் இத்தகைய மனநிலையில் இருக்கும் போது தாங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள முடிவுகளில் குறுக்கிடுகின்ற எந்தப் புதிய உண்மைகளையும் வரவேற்க மாட்டார்கள்.
.
- பக்கிள் [‪#‎Buckle‬]
http://en.wikipedia.org/wiki/Henry_Thomas_Buckle
From the book of the history of civilization

No comments:

Post a Comment