Saturday, April 1, 2017

நேற்று என்னை சந்தித்த அன்பு நண்பரொருவர்,இந்தியாவின் சுதந்திரம் தினம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

நேற்று என்னை சந்தித்த அன்பு
நண்பரொருவர்,இந்தியாவின்
சுதந்திரம் தினம் பற்றி உங்கள்
கருத்து என்ன என்று கேட்டார்.

ஏன் என்னை பார்த்து அப்படியொரு
கேட்வியை கேட்டார் என்று
வியப்பாக இருந்தது.. ஒருவேளை,
எனது பெயரும்,மத அடையாளத்தோடு
காட்சியளிக்கும் எனது முகமும்,
அப்படியொரு வினாவிற்கான
காரணமாக இருக்கலாம்...

இந்தியாவிற்கு சுதந்திரம்
கிடைத்து விட்டதா? என்ற
கிண்டல் கலந்த நியாயமான
கேள்வியை பதிலுக்கு நான்
அவரிடம் கேட்டேன்..

அவர் சற்று முரைப்பாக என்
கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
தோழரே என்றார்..

நான் கூறினேன்,,இந்திய ராணுவ
பயங்கரவாதிகளின் அதிகார
திமிருக்கும், உடல் இச்சைக்கும்
இரையாகிய காஷ்மீர் மற்றும்
மணிப்பூர் பெண்கள் இந்தியாவின்
சுதந்திரத்தை ஏற்று கொண்டால்
நானும் ஏற்று கொள்கிறேன்..

மணிப்பூரில் (asfa) என்ற கொடிய
சட்டத்திற்கெதிராக,15ஆண்டுகாலம்
உண்ணாவிரதப்போராட்டம்
நடத்திவரும் இரும்பு மங்கை
இரோம் ஷர்மிளா இந்தியாவின்
சுதந்திரத்தை ஏற்று கொண்டால்
நானும் ஏற்று கொள்கிறேன்..

இந்திய நீதிமன்றத்தின் வாசலில் 25
ஆண்டுகளாக நீதிக்கு போராடி வரும்,
பேரறிவாளனின் தாய் அற்புதம்
அம்மாள் இந்தியாவின் சுதந்திரத்தை
ஏற்று கொண்டால் நானும்
ஏற்று கொள்கிறேன்.

இந்துத்துவாவினரின் கூட்டு
மனசாட்சியை திருப்தி படுத்துவதற்காக,
அரச பயங்கரவாதத்திற்கு பலியாகிய
அப்பாவி அப்சல் குருவின்
குடும்பத்தினர் இந்தியாவின்
சுதந்திரத்தை ஏற்று கொண்டால்
நானும் ஏற்று கொள்கிறேன்..

குல்பர்க்கா சொஸைட்டியில்,
காவி கடப்பாரை கொடூரர்களால்
படுகொலை செய்யப்பட்ட முன்னால்
பாராளுமன்ற உறுப்பினரும்
அவருடன் அடைக்கலம் தேடி
வந்து செத்து மடிந்த அப்பாவிகளின்
குடும்பத்தினர்,இந்தியாவின்
சுதந்திரத்தை ஏற்று கொண்டால்
நானும் ஏற்று கொள்கிறேன்..

கடந்த 30ம் தேதி அஹ்ரகார
நீதிமன்றத்தின்,அக்கிரமமான தீர்ப்புக்கு
பலியாகிய யாகூப் மேமனின்
குடும்பத்தினர் இந்தியாவின்
சுதந்திரத்தை ஏற்று கொண்டால்
நானும் ஏற்று கொள்கிறேன்..

தர்மபுரியில்,சாதி வெறிபிடித்த
அரக்கர்களின் அற்ப அரசியல்
பசிக்கு இறையாகி உடைமையையும்,
குடியிருப்புகளையும் இழந்து வீதிக்கு
வந்த அந்த அப்பாவி எளிய மக்கள்
இந்தியாவின் சுதந்திரத்தை ஏற்று
கொண்டால் நானும் ஏற்று கொள்கிறேன்..

அவர்கள் இந்தியா சுதந்திரம்
அடைந்ததை மறுப்பாராயின்,
நானும் பாதிக்க்பட்டவர்களின்
பக்கம் நிற்பவனே!!!!!
என்று முடித்தேன்..!

_ஆழ்வை சம்சுதீன்

No comments:

Post a Comment