காவல்துறையினர் அனைவரும் அயோக்கியர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல. அதில் அயோக்கியர்களும் இருக்கிறார்கள், நல்லவர்களும் இருக்கிறார்கள்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியினர் என்று கண்டுபிடித்து அறிவித்த காவல்துறை அதிகாரிகள் தமிழகத்திலே இருக்கிறார்கள்.
காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க முஸ்லிம்களை காக்கா, குருவி போல் சுட்ட மாசானமுத்துகளும் இருக்கிறார்கள்.
தனது சகா காளிதாஸ் செய்யத் முகம்மதை காவல்நிலையத்தில் வைத்து சுட்டதை மறைக்காமல், எவ்வித நீதிமன்ற உத்தரவும் இல்லாத நிலையில் காளிதாஸை பணியிடை நீக்கம் செய்ததுடன் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைத்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
தனது கூட்டாளி சரவணனைக் காப்பாற்ற பவித்ரா வழக்கில் ஷமீல் அஹமதை சித்ரவதை செய்து கொன்ற மார்ட்டின்களும் இருக்கிறார்கள்.
உண்மை நிலை இவ்வாறிருக்க ஒட்டுமொத்த காவல்துறையினர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது அறிவுடைமையாகாது.
வேலூர் அடுக்கம்பாளையம் மருத்துவ மனையில் கடுமையாக காயமுற்றிருந்த காவலர் குமார் சொன்ன வார்த்தைகள் “காக்கிச் சட்டை போட்டால் எங்களுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. யாரோ ஒரு அயோக்கியன் செய்த தவறுக்காக எனக்கு இனி காக்கிச் சட்டை அணியக் கூட முடியாத நிலையை இப்படி ஏற்படுத்தியிருப்பது நியாயமா?”
-நன்றி மக்கள் உரிமை ஜீலை 10, 2015

No comments:
Post a Comment