மனு சாஸ்திரம் கூறுகிறது: “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண் (பிராமணப் பெண் கூடாது). சத்திரியன், வைசிய, சூத்திரப் பெண்களை மட்டுமே உறவு கொள்ளலாம் (பிராமணப் பெண்ணிடம் உறவுகொள்ள உரிமை இல்லை). சூத்திர ஆண்கள், சூத்திரப் பெண்களிடம் மட்டுமே உறவு கொள்ளமுடியும் (பிராமண, வைசிய, சத்திரிய பெண்களிடம் உறவு கொள்ள முடியாது). ஆனால், ‘பிராமண’ ஆண்கள், ‘பிராமண’ப் பெண்களை மட்டுமின்றி அனைத்து வர்ணப் பிரிவுகளிடமும் உறவு கொள்ளலாம் என்கிறது மனு சாஸ்திரம். (அத்யாயம்3 - சுலோகம் 13)
.
‘மனு’வின் இந்த சமூக ‘விதி’களை ஆழமாக ஆய்வுக்குட்படுத்திய அம்பேத்கர், தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறார். சமூகத்தில் அடிமைத்தனத்தக்கான விதிகளை உருவாக்கிய மனு அந்த விதிகளை அதன் இயல்பான போக்கில் செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறும் அம்பேத்கர்,‘அதன் போக்கில் - இந்த அடிமை விதிகளை செயல்பட அனுமதித்திருந்தால் - ஒரு கட்டத்தில் அடிமைகளுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தும் சக்தியாகக்கூட இது மாற வாய்ப்புகள் இருந்திருக்கலாம். ஒரு ‘பிராமணன்’ தீண்டப்படாதவனின் அடிமையாகவோ, அல்லது ஒரு தீண்டப்படாதவன், ‘பிராமணனின்’ எஜமானனாகவோகூட
மாறியிருக்கக்கூடும். இப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதால்தான் “வர்ண சமூக அமைப்பில் அடிமைத்தனம் மேலிருந்து கீழ் நோக்கி நகரலாமே தவிர கீழிருந்து மேல் நோக்கி நகரவே முடியாது”என்பதை கட்டளையாக்கிவிட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.
.
“ஒரு ‘பிராமணன்’ தனக்குக் கீழே உள்ள எந்த வகுப்பையும் அடிமையாக்கிக் கொள்ளலாம். ஆனால், சூத்திர, வைசிய வகுப்பினர் தங்களுக்கு மேலான பிரிவினரை அடிமையாக்க முடியாது என்று அம்பேத்கர் விளக்குகிறார். வர்ணாஸ்ரம சமூக அமைப்பின் வழியாக பின்பற்றப்பட்டு வந்த அடிமை விதிகள், குப்தர் காலத்தில் அரசு அதிகாரத்துடன் கடுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சூத்திர ஜாதி இழிவுகளோடு பெண்ணடிமையும் கைகோர்த்துக்கொண்டு சமுதாயத்தில் காலம் காலமாக சீரழிவை நிலைநாட்டி வந்திருக்கின்றன. இதற்கான மூலம் பார்ப்பனர்களிடமிருந்தும் அவர்கள் உருவாக்கிய வர்ணாஸ்ரம அமைப்பிலிருந்தும் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சமூக வரலாற்று உண்மைகளை இப்போது மரபணு வழியாக நிகழ்த்தப்பட்ட இந்த அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.
- புரட்சிப் பெரியார் முழக்கம் 04.02.2016

No comments:
Post a Comment