Saturday, April 1, 2017

ஒட்டு மொத்த தமிழக காவல் துறையையும் மறுசீரமைப்பிற்குள்ளாக்குவது மிகத் தேவையான ஒன்று.

இப்ப இருக்கிற சூழலில் திருமாவும், கிருட்டிணசாமி அல்லது சவகீருல்லாவும் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தால் கூட தாமிரபரணி பரமக்குடி கோயம்புத்தூர் படுகொலைகள் நடந்து தான் இருக்கும். ஏனெனில் தமிழக காவல் துறையில் அந்த அளவிற்கு சாதி வெறியும் காவி வெறியும் புறையோடிக் கிடக்கிறது.

அந்த இயலாமையில் தான் கருணாநிதி ஒரு முறை காவல் துறையின் ஈரல் கெட்டுப் போய் விட்டது என்று வெளிப்படையாக பேசினார்.

அதனால் தான் ஒரு முன்னாள் முதலமைச்சர் என்ற உணர்வு கூட இல்லாமல் ஒரு தெருநாயை இழுத்து செல்வது போன்று இழுத்து சென்றனர் அந்த காவாலிகள்.

அதைப் போன்று செயாவை இழுத்து செல்ல வேண்டும் என்று செயாவை கைது செய்கிற இடத்திற்கே வந்து கருணாநிதி கட்டளையிட்டு இருந்தாலும் காவல் துறையினர் அதை சட்டை செய்து இருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

இப்போதைய சூழலில் ஒட்டு மொத்த தமிழக காவல் துறையையும் மறுசீரமைப்பிற்குள்ளாக்குவது மிகத் தேவையான ஒன்று.

-Anthony Fernando

No comments:

Post a Comment