Saturday, April 1, 2017

இறைதூதர், தமது வாழ்நாளில் சில யுத்தங்களையும் நீதியையும் சாமாதானதையும் நிலை நாட்டுவதன் பேரில் செய்ய நேரிட்டது. பாசிசத்தையும், ஹிட்லரின் நாசிக்களையும், கம்யூனிச செம்படைகள் வீழ்த்தி

இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கம், முஹம்மத், சமாதானத்தின் தூதர் என்று சொல்வதெல்லாம், இஸ்லாம், உலகில் எம்மாதிரியான சமூக அமைப்பினை உருவாக முனைகின்றது எனும் அளவில் சரியானதுதான்.
.
உலகம் முழுவதும் உள்ள பன்முகப்பட்ட மக்கள் திரள்களுடனான உறவுகளை இஸ்லாம் சமாதனம் என்ற அடிப்படியிலேயே கட்டியெழுப்ப நாடுகின்றது.
.
ஆனாலும், எல்லாக் காலத்திற்கும், எல்லா இடங்களிற்கும், எல்லா சூலமைவுகளுக்கும் பொருத்தமான ஒரு சமாதான சாரம்சத்தை நாம் இஸ்லாத்தில் இருந்து வடித்து எடுத்து, அதனை கால, இட, சூழல் பரிமாணங்களை கடந்து பொருத்தி பார்த்திட இயலாது.
.
பூமியில் குழப்பங்கள் விளைவித்து, சமூக அமைதிற்கு பங்கம் ஏற்படுத்துபவர்களை எதிர்கொள்ள இஸ்லாம் ஜிஹாத் எனும் வழிமுறையையும் முஸ்லிம்களின் மீது நியமம் ஆக்கியுள்ளது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்...
.
மியன்மார் முஸ்லிம்களின் மீதான, பர்மிய பாசிஸ்டுகளின் மிலேச்சதனமான படுகொலைகளையும், சொத்து அழிப்பினையும் எதிர்கொள்ள, அரசியல் ரீதியான நீண்டகால திட்டங்களின் தேவையை நாம் அழுத்தமாக உணர்கின்றோம். ஆனாலும் உடனடியாக எரியும் பிரச்சினை எனும் அளவில், ரோஹிங்க்யா அவலத்துக்கு என்ன முடிவு கட்டலாம்?
.
இலங்கை போன்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களின் மக்கள், மியன்மார் முஸ்லிம்களுடன் துஆ-பிரார்த்தனை எனும் அளவில் உணர்வுபூர்வமாக ஒன்றிணையலாம். நிதி ஆதாரங்களை அளிக்கலாம். ஒரு அழுத்தக் குழுவாக, தத்தமது நாடுகளின் அரசாங்கங்களை , மியான்மருக்கு நீதி பெற்றுக் கொடுக்கும், அரசியல் தீர்வு எனும் வகையில் அழுத்தலாம்.
.
ஆனால், பெருன்பான்மை முஸ்லிம் நாடுகளின் எல்லைகள் எம்மைவிட மிகவும் விரிவுபட்டது. பிரமாண்டமான அதிகார எல்லைகள் கொண்டது. சவூதி, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளின் மௌனம்தான் எம்மை அதிர வைக்கின்றது. முஸ்லிம் நாடுகளின் தலைமை ஸ்தானம் யார் வகிப்பது என்பதில், தமக்குள் முரண்பட்டு போரிடும் முஸ்லிம் நாடுகளின் தலைமைகள், மியன்மார் முஸ்லிம்களின் மீதான இனச் சுத்திகரிப்பை கண்டும் பாராமுகமாக இருபதைத்தான் என்னவென்று புரிந்து கொள்வது?
.
இன, மொழி, நிற வேறுபாடுகளை கடந்த முஸ்லிம் அகில சகோதரத்துவம் என்பது மாயையா? அல்லது நபிகளாரின் உன்னத சமூக அமைப்பின், கால வரம்பினுள் மட்டுமே நடைமுறையான ஒரு சமூக திட்டத்தின் இலட்சியமா? உள்ளத்தை அழுத்தும் வேதனைமிக்க கேள்விக்கு பதில் அளிக்க்கப்படுமா?
.
இஸ்லாம் சாந்தி, சமாதானத்தின் மார்க்கம் மட்டுமல்ல. எதிர்ப்பினதும், கலகத்தினதும் மார்க்கமும் கூட என்பதை, மியன்மார் முஸ்லிம்களின் அவல நிலையை அவதானிக்கும் ஒருவர் உணர்ந்து கொள்ளும் தருணம் இது.
.
இறைதூதர், தமது வாழ்நாளில் சில யுத்தங்களையும் நீதியையும் சாமாதானதையும் நிலை நாட்டுவதன் பேரில் செய்ய நேரிட்டது. பாசிசத்தையும், ஹிட்லரின் நாசிக்களையும், கம்யூனிச செம்படைகள் வீழ்த்தியது அண்மைக்கால உலக வரலாறு. மியன்மார் முஸ்லிம்களை உடனடியாக பாதுகாக்க முஸ்லிம் நாடுகள், மியன்மாரின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
.
மனித குலத்திற்கு எதிரான இந்த இழிசெயலை உடனடியாக நிறுத்த, முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் செய்யக் கூடியது அதுதான். இது நடக்குமா,நடக்காத என்ற விடயத்தையும், ஆரூடங்களைய்ம் தாண்டி,மனித நேயத்தை வற்புறுத்துகின்ற ஒரு மானுடனாக எனது உள்ளம், அவாவுவது இதனைத்தான்...!
.
அல்லாஹ் பர்மிய முஸ்லிம்களின் துயரங்களை நீக்குவானாக. உலகின் ஆதரவுக் கரத்தனை அவர்களை நோக்கி நீட்டிட செய்வானாக. ஆமீன்.

-Lafees Shaheed

No comments:

Post a Comment