Saturday, April 1, 2017

யாகூப் மேமன் வழக்கில் நீதியும் தூக்கில் தொங்குகிறது !

யாகூப் மேமன் வழக்கில் நீதியும் சேர்ந்தே தூக்கில் தொங்குகிறது! யாகூப் மேமனை தூக்கிலிடுவதன் மூலம் முஸ்லிம்கள் இந்திய நீதி மற்றும் ஜனநாயக மாண்புகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கப்படவில்லை. ஏற்கனவே இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த அப்சல் குரு தூக்கில் பலியிடப்பட்டபோதே அந்த நம்பிக்கையை இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! இஹ்சான் ஜாப்ரி, இஸ்ரத் ஜஹான், சொராபுதீன், கௌசர் பி, சாதிக் ஷேக் மற்றும் எண்ணற்றவர்களை போலி என்கௌண்டர்கள் கொலை செய்தவர்களை தப்பிக்கவிடப்பட்டது மட்டுமின்றி பதவிகள் மூலம் கௌரவிக்கப்பட்டபோது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! மோடி, அமித்ஷா, வன்சாரா, பாண்டே போன்றோர் சாட்சியங்களை அழித்து தூய்மையானவர்கள் பட்டம் கொடுக்கப்பட்டபோது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! ஹாஷிம்புராவில் 43 அப்பாவி முஸ்லிம்களை கொன்ற கொலைகார காவல்துறையினர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டபோது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! டைகர் மேமன்கள் உருவாகக் காரணமாக இருந்த மும்பை கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கற்பையும், உயிரையும் சூறையாடியதன் மூளையாக கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரே அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட போது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வன்முறைக்கு காரணமான கல்யாண்சிங் அதற்கு தண்டனையாக அரசு மாளிகையில் சில மணிநேரங்கள் கைதியாக தங்க வைக்கப்பட்டபோது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி போன்ற கொலைகாரர்கள் தீவிரவாதிகள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்ட போது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பாடுபடும் சஞ்சிவ் பட், தீஸ்தா செடல்வாட் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்படும்போது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! அப்பாவி முஸ்லிம் சிறைக் கைதிகளுக்காக போராடிய வக்கீல் ஷாஹிதைக் கொன்ற தீவிரவாதிகள் கௌரவிக்கப்பட்டபோது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான், சம்ஜௌதா குண்டுவெடி்பு தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும்படி புலனாய்வுத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்ட போது இந்திய ஜனநாயக அரசாங்கத்தின் நீதி தகர்த்துவிட்டது..! டைம்ஸ் ஆப் இந்தியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் மூன்று பேர் ஒடுக்கப்பட்ட, மதச் சிறுபன்மையின, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்ற அறிக்கையை வெளியிட்டபோது.. மொத்தத்தில் மேலே பட்டியலிடபபட்ட சம்பவங்களை விட யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதன் மூலம் இந்திய முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்திவிட முடியாது..! - யாகூப் மேமன் வழக்கில் நீதியும் தூக்கில் தொங்குகிறது ! இந்த நேரத்தில் யாகூப் மேமன் விவகாரத்தில் முன்னாள் நீதிபதிகள்,மூத்த வக்கீல்கள்,பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன். முன்னாள் நீதிபதி: மார்கண்டேய கட்சு "யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன் அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதரங்களும் மிக பலகீனமானவை. நீதி துறை பொருத்தவரை குற்றம் சாட்டபட்டவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கில் தொங்கினாலும் பராவாயில்லை தாங்கள் தீவிரவாததிற்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்து கொள்பவர்கள் என்று காட்டி கொள்ள பல நீதிபதிகள் விரும்புவது தற்போது பிரபலமாகி வருவது மிகுந்த அச்சத்தை தருகிறது." நீதிபதி குரியன் ஜோசப் "அவசரகதியில் சரியாக விசாரிக்காமல் ஒருவரை தூக்கில் போடுவது மனித உரிமைக்கு எதிரானது." வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி "யாகூப் மேமனை தூக்கில் போடுவது நீதித்துறையின் கேலிக்கூத்து! சரண் அடைந்தவரை தூக்கிலிடுவது கொடுமையிலும் கொடுமை." மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துல்சி "யாகூப் மேமனை தூக்கில் போடக்கூடாது" பத்திரிக்கையாளர் மஸீ ரஹ்மான் 1994 இல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், அவுட் லுக்கில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரும் நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன் தான்." தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் கருத்து "நாடே துக்கத்துல (அப்துல் கலாம் மரணம்) இருக்கும்போது சுப்ரீம் கோர்ட்டும், ஜனாதிபதியும் வேலை செஞ்சி ஒருத்தரை தூக்குல போடலாமா? இதை அனைவரும் கண்டிக்க வேண்டாமா?" யாகூப் மேமனின் வார்த்தைகள் "டைகர் மேமனுக்கு சகோதரனாகப் பிறந்ததற்காக என்னை தூக்கிலிடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் என என்னைத் தூக்கிலிடுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது." "நீதி அனைவரும் சமம்" என்பது வார்த்தையில்தான் இருக்கிறது. செயலில் செத்துக்கொண்டே வருகிறது. யாகூப் மேமன் வழக்கில் நீதியும் சேர்ந்து தூக்கில் தொங்குகிறது. சண்டாள சதிகாரர்கள்.. கலாமை திரையில் காட்டி மேனனை தூக்கில் தொங்கவிட்டார்கள் ஒட்டு மொத்த மீடியாவும் கலாமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில்.. சத்தமில்லாமல் செய்தியை மூடி மறைத்து இருட்டடிப்பு செய்யும் பார்ப்பணிய தந்திரம்.. யாகூப் மேமனுக்கு தூக்கிலிடப்பட்டார்...... கலாம் இறுதி சடங்கு... இன்று ஒரு நாள் அரசு விடுமுறை! நீதி மன்றங்கள் இயங்காது! வியாபார நிறுவனங்கள் விடுமுறை! பால் விநியோகம் கிடையாது! லாரிகள் ஓடாது! ஆனால் #யாகூப் போன்றவர்களை அறுக்கும் அரசாங்க கசாப்பு கடை மட்டும் வழக்கம் போல் இயங்கும். விந்தையான நாடு! வினோதமான நீதி! தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க தானாக முன்வந்து சரண் அடைந்த இவருக்கு தூக்கு. நாட்டின் பிரதமர் மற்றும் மக்களை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை ரத்து. விடுதலை போங்கடா நீங்களும் உங்க குப்பை சட்டமும். தூக்கு தண்டனையை அறவே வெறுத்த அப்துல் கலாம் அவர்களின் உடம்பை அடக்கம் செய்வதற்க்கு முன்பே மத்திய அரசு கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த மானம் கெட்ட மத்திய அரசு யாக்கூப் மேனனை தூக்கில்லிட்டது நல்ல அஞ்சலி???? 

No comments:

Post a Comment