Saturday, April 1, 2017

வஞ்சகத்தில் கொல்லப்பட்ட ராவணன் புகழ் பாடு.

பாடு அவன் புகழ் பாடு....
போராளிகளில் மிகப் பெரிய போராளி அவன்.
அரசர்களுக்கெல்லாம் அரசன் அவன்.

அவனது ராஜ்ஜியத்தில் வறுமை இல்லை.
அவனது ராஜ்ஜியத்தில் துன்பம் இல்லை.
மருத்துவர்களில் தலை சிறந்த மருத்துவன் அவன்.

ஞானிகள் மத்தியில் மிகப் பெரிய ஞானி அவன்.
தீ மேல் நடப்பது எப்படி என்ற புத்தகம் எழுதியவன் அவன்.
இசைக் கருவிகளை வடிவமைத்தவன் அவன்.

இசையின் சங்கமமாகவும் ஊற்றாகவும் இருந்தவன் அவன்.
யாகம் செய்யும் அந்தணர்களையும் யோகிகளையும் பந்தாடியவன் அவன்.

பார்ப்பனியம் அல்ல தர்மமே அவன் சித்தாந்தம்.
தனது தாய்க்கும் தகப்பனுக்கும் அனுராதபுரத்தில் கோவில் கட்டியவன் அவன்.
ஒரு தலை அல்ல, இரு தலை அல்ல பத்து தலைகள் கொண்டவன் அவன்.

பாடு அவன் புகழ் பாடு .
பாடு ராவணன் புகழ் பாடு.
வஞ்சகத்தில் கொல்லப்பட்ட ராவணன் புகழ் பாடு.
பாடுவோம் லங்கேஸ்வரன் புகழ் பாடுவோம்.

---

ராம காவியம் ஒரு குறியீடு. பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்தும் ஒரு குறி. அந்த குறியீட்டை சுக்கு நூறாக உடைக்கும் வல்லமை உடையது ராவணக் குறியீடு.

நிறைய பழங்குடி மக்கள் ராவணனை வணங்குகிறார்கள். ஜோத்பூரில் ராவணனுக்கு கோவிலே உண்டு.

ஏதோ ஒரு விதத்தில் பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிராதரவற்ற சூழலில் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பே ராவண வணங்கல். ராவணனின் நேர்மையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ராமனுக்கு இல்லை.

குறியீட்டு போராட்டத்தை குறியீட்டால் எதிர்ப்போம். பார்ப்பனியத்தின் குறியீடு ராமன். பார்ப்பனிய எதிர்ப்பின் குறியீடு ராவணன்.

- துணைத் தளபதி மார்கோஸ்

No comments:

Post a Comment