Saturday, April 1, 2017

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்திய சமூகத்தின் ஒரு சோற்றுப் பதம் பாஸ்,

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்திய
சமூகத்தின் ஒரு சோற்றுப் பதம் பாஸ்,

பள்ளியில் பெண் ஆசிரியர்களின்
பெயரைக் கெட்ட சொற்களோடு
இணைத்து சுவற்றில் எழுதும்
ஒரு கூட்டம் இன்னமும் இருக்கிறது,

பக்கத்து வீட்டுக்கு வருகிற ஆண்
விருந்தினர்களோடு பெண்ணைப்
பழித்துப் பேசுகிற எத்தனையோ
வீடுகளை நாம் தொடர்ந்து கடந்து
வந்திருக்கிறோம்,

துணைவியாரைக் கூட "தே......ள்"
என்று பொது இடங்களில் பேசுகிற
கணவன்கள் வீதிக்குப் பத்துப் பேர்
இருக்கிறார்கள்,

கல்லூரியில்ஆண் நண்பர்களோடு
ிரித்துப் பேசுகிற சக தோழியை
"அவளுடைய விலை என்ன தெரியுமா?"
என்று நாக்கூசாமல் சொல்கிற பத்துப்
பேராவது ஒரு கல்லூரியில் இருக்கிறான்,

அலுவலகத்தில் சக பெண் தோழியரின்
முலையளவு குறித்து மதிப்பெண்
போட்டு போட்டி வைக்கிற வன்மம்
நிரம்பிய காவாலிகளை ஒரு வலி
நிரம்பிய புன்னகையோடு கடந்து
வந்திருக்கிறோம்,

சாலையின் சந்திப்பில் நிறுத்தங்களில்
பெண்களை ஏதோ ஒரு வினோத
காட்சிப் பொருளைப் போல வக்கிரமாகப்
பார்க்கிற பெரிய மனிதர்களை தினமும்
பார்க்கிறோம்,

"வேலைக்குப் போகிற பெண்கள்
எல்லாம் படுக்கை விரிப்பவர்கள்"
என்று எந்தத் தயக்கமும் இல்லாமல்
சொல்கிற ஆண்களை நிறையவே
சந்தித்திருக்கிறோம்,

நகைச்சுவை என்கிற பெயரில்
பெண்ணுடலை அரசியல் பொதுச்
சொத்தாக்கிய மதிப்புக்குரிய மகத்தான
ஐயாவைப் பார்க்கிறோம்,

வயதான தந்தையைப் போன்ற ஒரு
ஆளுனரை நோக்கி என்னைப் பாலியல்
தொல்லை செய்தார் என்று புளுகிய
அம்மாவைப் பார்க்கிறோம்,

முன்னாள் முதல்வரின், வயதில்
மூத்த பெரியவரை கட்சியில் இருந்து
பணியாற்றிய நடிகையோடு இணைத்தும்,
அவரது குடும்பப் பெண்களை அவதூறு
செய்தும் இன்றும் பேசுகிற தமிழ்த்
தேசியப் பொன்னம்பலங்களையும், புரட்சி
படைக்கப் போகிற புண்ணாக்குகளையும்
இணையம் என்கிற மாபெரும் தொழிநுட்ப
யுகத்தில் இங்கேயே வதவதவென்று
பார்க்கிறோம்.

இங்கே இளங்கோவன், பெருங்கோவன்
வேறுபாடு எல்லாம் கிடையாது, முதல்வரோ,
பிரதமரோ யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம், பெண்ணின் உடலுக்கான
முதல் பொதுத் தகுதி படுப்பது, ஆணின்
தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவ்வளவுதான்.

யாருடனாவது 50 நிமிடம் பெண் தனித்திருந்தால்
அவள் உறுதியாகப் படுத்து உருண்டு
சல்லாபம் செய்து விட்டுத்தான் மறுவேலை
செய்வாள். ஆயிரமாண்டு கால ஆணின்
பழக்கப்பட்ட மனம் எப்போதாவது அதை
ஒலிபெருக்கியிலும் பேசி விடுகிறது.
இளங்கோவன் மாட்டிக் கொண்டார் பாவம்......

# # # நம்மையே எதிர்த்து நாம்
போராடிக் கொண்டிருக்கிறோம், ஹி ஹி ஹி.... # # #

-Arivazhagan Kaivalyam

No comments:

Post a Comment