Monday, April 3, 2017

சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா மீதான வழக்கு


ஊழல் ராணி ஜெயலலிதா-வுடன் 33 ஆண்டுகளாக நகமும் சதையுமாக இருந்தவர் எப்படி உத்தமராக இருக்கமுடியும்?

இல்லை இவ்வளவு மோசமான ஒருவரை 33 ஆண்டுகளாக உடன் வைத்திருந்த ஜெயலலிதா எப்படி உத்தமராக இருக்கமுடியும்?

இருபதாண்டுகளில் எத்தனை வாய்தா! எவ்வளவு இழுத்தடிப்பு!

--------------------------------------------------------------------------------------------------------------------------

இதே வழக்கில் குன்ஹா தீர்ப்பு எழுதியபோது ஓபிஎஸ் அணியினர் செய்தவை

  1. தாடி வைத்து அழுது புலம்பல்
  2. கலவரங்கள், கடையடைப்பு
  3. கோயில்களில் சிறப்பு பூஜைகள்
  4. அலகு குத்தி காவடி எடுத்தல்
  5. கூட்டமாக மொட்டை அடித்தல்
  6. வழக்கே திமுகவின் சதி என புகார்

அந்த குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்ததும் ஓபிஎஸ் அணியினர் செய்வது

  1. சாலைகளில் பட்டாசு வெடித்தல்
  2. புரட்சித்தலைவி அம்மா வாழ்க கோஷம்
  3. WhatsAppல் மகிழ்ச்சிகளை பகிர்தல்
  4. மக்களுக்கு இனிப்பு வழங்கல்
  5. நீதி வென்றுவிட்டது என கொண்டாட்டம்
இவர்கள் லூசா? நாம் லூசா?

--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா மீதான வழக்கு. வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்துக்களை குவிக்க உதவி செய்தவர்கள் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் (இந்த வழக்கைப் பொருத்தவரை). இந்தத் தீர்ப்பின் மூலம், மக்கள் பணத்தை “மக்களால் நான் - மக்களுக்காக நான்” என்று சொன்னவர் திருடி இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்துவிட்டதால் ஜெயலலிதா ஒன்றும் பெரிய புனிதரல்ல.

ஜெயலலிதா, தனக்கென யாரும் இல்லை என்று சொல்லி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல் பெருச்சாளி. எனவே சசியை மற்றும் குற்றவாளியாக்கி ஜெவை புனிதபட்டம் கட்டி "ஆட்சி புடிப்போம், அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்"-னு யாராவது கூவிக்கினு இருந்தா அவர்களையும் புடித்து உள்ள போடனும் யுவர் ஆனர் இல்லையேல் நீதி மன்ற அவமதிப்புன்னாச்சும் கேசு போடனும்.

செய்வீர்களா???? செய்வீர்களா?????

--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்...
  1. விசாரணை நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
  2. ஜெயலலிதா மற்றும் மூவரும் சேர்ந்து சதி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  3. நால்வருக்கும் இடையே தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  4. ஜெயலிதா தன் சொத்துக்களை பாதுகாக்கவே சசிகலாவை துணையாக வைத்திருந்தாரே தவிர மனிதாபிமான அடிப்படையில் அல்ல.
  5. குமாரசாமி தீர்ப்பில் சொன்னதைவிட ஜெயலலிதா வின் சொத்து மதிப்பு 211% அதிகம்.
  6. எல்லா நடவடிக்கைகளும் ஜெயலலிதா வின் வீட்டில் இருந்த அலுவலகங்களிலேயே இயங்கின என்பதும் நிரூபணமாயிருக்கிறது.
எனவே ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகளே, நீதிபதி குன்காவின் தீர்ப்பு சரியே என இரு நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment