கலைஞரும் சமூகநீதியும் அதற்கு அவருக்கு வழங்கப்படும் தண்டனையும் - நீண்ட உரையாடல்
புது அரக்கன் :- சீனியர் அரக்கரே ஒரு சந்தேகம். ஜெ ஊழலே செய்யாதவர் போலவும்,கருணாநிதி மட்டுமே ஊழல்வாதி போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறதே, உண்மை என்ன? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
கிளிமூக்கு அரக்கன் :- திராவிடம்... ஆம் திராவிடம் என்பது தான் இக் கேள்விக்கான பதில். அந்த திராவிடத்தை எதிர்ப்பவர்கள் தான் உங்கள் கேள்வியின் காரணத்துக்கான பின்னணியில் இருக்கிறார்கள்.
புது அரக்கன் :- சுத்தமா விளங்கல.... கொஞ்சம் புரியும்படி தான் சொல்லுங்களேன்.
கிளிமூக்கு அரக்கன் :- இப்போ... ஐ ஐ எம், ஐ ஐ டி, எய்ம்ஸ்... இப்படியான மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும், மத்திய பல்கலக் கழகங்களிலும் என்னென்ன ஜாதிலேர்ந்து வந்தவங்கன்னு சொல்லு பார்ப்போம்.
புது அரக்கன் :- இது என்னா சார் கேள்வி... எல்லாருக்கும் தெரிஞ்சது தானே...! மேக்ஸிமம் வேதவிற்பன்னர் படிப்பா.... தாழ்த்தப்பட்ட வகுப்பிலேர்ந்து கொஞ்சம் படிப்பாங்க... மிச்சம் மீதி, சொச்ச மிச்சம்... இத்தத்தூண்டு நம்மள மாதிரியான கம்யூனிடிலேர்ந்து வந்து படிப்பாங்க...! கரெக்ட்டா சார்...!
கிளிமூக்கு அரக்கன் :- சூப்பர்...! கொஞ்சம்... ஓரளவுக்கு எக்ஸாக்ட்டா யார் யார் அதாவது எந்தெந்த ஜாதியை சேர்ந்தவங்க எத்தனை எத்தனை சதவீதம் இங்கெல்லாம் படிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?
புது அரக்கன் :- அது ரொம்ப கஷ்டமாச்சே சார்...
கிளிமூக்கு அரக்கன் :- சரி அப்டீன்னா ஒன்னு பண்ணு. நீ சொல்ற அந்த உயர் ஜாதிக்காரங்க இருக்காங்களே அவங்கள ஒரு பிரிவாகவும்..., தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஒரு பிரிவாகவும்.... இரண்டுக்கும் இடையில் இருக்குற நம்மள மாதிரி ஜாதியினரை ஒரு பிரிவாகவும்... ஆக மொத்தம் மூனு பிரிவா பிரிச்சி... இந்த மூனு பிரிவுலயும் எத்தனை எத்தனை சதவிகிதம் பேர் படிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?
புது அரக்கன் :- சார்.... SC/ST..., OBC..., OC... இதத்தான சார் சொல்றீங்க?!
கிளிமூக்கு அரக்கன் :- எக்ஸாக்ட்லி.... அதே தாம்ப்பா….! இப்ப சொல்லு...!
புது அரக்கன் :- சார்.. மத்திய அரசு உயர்கல்வி படிப்புகளில் SC/ ST ல அல்ரெடி ரிஸர்வேஷன் இருக்குறதுனால பதினெட்டு பத்தொம்போது பர்செண்ட் வரைக்கும் இருப்பாங்க சார். பாக்கி எல்லாம் OC, அதில் பெரும்பாலும் வேதவிற்பன்னர்கள் இருப்பாங்க. அதுல கொஞ்சூண்டு... அதாவது ஐந்தாறு சதவிகிதம் மட்டும் நம்மள மாதிரி இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிப்பாங்க சார்.
கிளிமூக்கு அரக்கன் :- வெரி குட்... இதெல்லாம் உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. ஆனா இது ஏன் இப்படி நடக்குதுன்னு மட்டும் புரிய மாட்டேங்குது.
புது அரக்கன் :- எனக்கு என்ன புரியலன்னு சொல்ல வர்றீங்க?
கிளிமூக்கு அரக்கன் :- இல்லப்பா அதுல 80% வேதவிற்பன்னர்களே ஆக்கிரமிச்சிருக்காளே... மத்தவங்க எல்லாம் ஏன்... அதாவது நம்மைப் போன்றவர்கள் ஏன் அங்க ஒற்றை இலக்கத்தில் மட்டும் தான் படிக்க முடியுதுன்னு யோசிச்சிருக்கியா? அது தான் இன்னும் உனக்கு புரியலியோன்னு நினைக்கிறேன்.
புது அரக்கன் :- அதெல்லாம் ரொம்ப கஷ்டம் சார். நம்ம ஸ்டேட் கவர்ன்மெட்ல கொடுக்குற மாதிரி இடைநிலை ஜாதிகளுக்கும் அங்கே கொஞ்ச நாள் தொடர்ந்து இட ஒதுக்கீடு கொடுத்தா... அடுத்த பத்திருபது வருஷத்துல நம்மாளுங்களும் வேதவிற்பன்னர்களை விட அங்க அதிகமா இருப்போம் சார்.
கிளிமூக்கு அரக்கன் :- ஏன் அப்ப அங்க இட ஒதுக்கீடு இல்லைன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா?
புது அரக்கன் :- நீங்களே சொல்லுங்க
கிளிமூக்கு அரக்கன் :- அம்பது அறுபது வருஷத்துக்கு முன்னாடி.. இங்க நம்ம மாநிலத்துலயும் இதே மாதிரி தான் நிலைமை இருந்திச்சி. எல்லா அரசு வேலைலயும், கல்வி நிலையங்களிலேயும் வேதவிற்பன்னர்கள் தான் 90% இருந்தா...
அந்த நிலைமைல தான் இப்போ இருக்குற ஒரே திராவிடக் கட்சியான திமுகவோட அப்பன் திக, பாட்டன் நீதிக் கட்சி.... இவிங்க எல்லாம் போராட்டம் நடத்தி, உயர்ஜாதி அவாளைத் தவிர மீதி இருக்கிற நம்மள மாதிரி ஜாதிக்காரங்க எல்லாத்தையும் ஒரே வகுப்பா... ஒரே இனமா முன்னிறுத்தி... பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்ற ஒற்றை வகுப்பில் வகைப்படுத்தி.... தமிழக அளவில் அரசின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்றனர்.
அதன்பிறகு தான் அன்றைக்கு ஒற்றை இலக்கத்தில் இருந்த நம்ம ஆளுங்க எல்லாம் இன்னிக்கு வேதவிற்பன்னர்களை ஒற்றை இலக்கத்திற்கு மாற்றி விட்டுட்டாய்ங்க.
புது அரக்கன் :- சார்.... இது ஓக்கே தான்... இந்த வரலாறு எல்லாம் ஓரளவுக்கு எனக்கும் தெரியும். ஆனா இங்க உங்ககிட்ட கேட்ட கேள்வி கலைஞரை மட்டும் ஏன் ஊழல்வாதின்னு சொல்றாங்கன்னு தான்..! அதுக்கு பதில் சொல்லாம எங்கெங்கேயோ சுத்துறீங்களே....?
கிளிமூக்கு அரக்கன் :- திராவிடக் கூத்து ஆடினாலும்.... காரியத்துல கண்ணாயிருக்கீங்க தம்பி. ஆனா என்ன... உங்க சந்ததிக்களுக்கன பலனுக்கு கண்ண வச்சிருந்தீங்கன்னா நல்லாயிருந்திருக்கும்...! அத விடுங்க... உங்க கேள்விக்குத் தான் இப்ப வர்றேன்.
கலைஞர் இங்க எந்த இடத்துல வர்றாருன்னா???பறவை பறப்பதைத் தடுக்கணும்ன்னா அதன் கால்களை ஒடிக்காதே... அதன் சிறகுகளை பறித்து விடு... என்ற வேதவிற்பன்னத்தனமான.. ஸாரி சாணக்கியத் தனமான ஒரு பழமொழி உண்டு. இதன் அடிப்படையில் தான் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பெற்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் வேதவிற்பன்னர்களுக்கு இணை என்பதை விட வேதவிற்பன்னர்களை விட உயர்ந்து விட்டிருக்கின்ற நிலையில்....இதன் அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக.... மத்திய அரசின் வேலை மற்றும் கல்வி நிலையங்களிலும் இதேப் போன்ற இட ஒதுக்கீட்டைப் பெற திமுக... அதாவது கலைஞர் எத்தனிக்கிறார். அதன் முதல் படியாகத்தான் இந்த கொள்கைக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய வி.பி.சிங் அவர்கள் பிரதமராவதற்கு வழி வகுத்த கலைஞர்... அப்படி அவர் பிரதமரானவுடனேயே....மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வேலை வாய்ப்புக்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு... அதாவது நம்மைப் போன்ற இடைநிலை சாதியினருக்கு பெற்றுத் தந்தார்.
அதற்கு அடுத்தக் கட்டமாக அதே மாதிரியாக மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டைப் பெற முயற்சிக்கும் போது தான், வட இந்திய உயர்ஜாதி மாணவர்கள் அதற்கு எதிராக மிகப் பெரும் போராட்டத்தை நடத்தி... (இரண்டு மாதங்கள் முன்பாக குஜராத்தில் நடந்தது போல)... அவா தரப்பு ஊடகங்களும் அதை ஆஹோ.. ஓஹோவென எழுதி.. வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து அது நிறைவேறாமல் தடுத்தனர்.இங்குள்ள தினமலர், தினமணி, இந்து டைப் வேதவிற்பன்ன ஊடகங்கள் எல்லாம்... இதற்கெல்லாம் மூல காரணமே கலைஞர் தான் என்பதை தங்களுக்கு ஏற்கனவே உள்ள லோக்கல் அனுபவத்தின் மூலம் உணர்ந்து... அதை நேரடியாகச் சொன்னால் கலைஞருக்கு பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவு பெருகும்... அதனால் எப்பொழுதுமே அவர் தான் வெல்வார்... அவர் சொல்லுகின்ற ஆட்சி தான் மத்தியில் அமையும்... அப்படி அமையும் பட்சத்தில், இந்த இட ஒதுக்கீடுகளை மத்திய கல்வி நிலையங்களில் அவர் கொண்டு வந்தே தீருவார் என்று துல்லியமாக கணக்கிட்டு....இவர்... அதாவது கலைஞர் பறக்கக் கூடாது... அதாவது அதிக எம் எல் ஏக்களும், எம்பிக்களும் இவருக்கு கிடைக்கக் கூடாது என்றால்... இந்த இடஒதுக்கீடு விஷயத்திற்காக இவரிடம் நேரடியாக மோதி அவரது காலை மட்டும் உடைத்து பயன் இல்லை....! மாறாக அவர் பறப்பதைத் தடுத்தால் தான் இட ஒதுக்கீடு மத்திய கல்வி நிலையங்களில் நிறைவேறாது.
ஆகவே அவரது சிறகுகளைப் பிடுங்கி எறிய வேண்டும். சிறகு என்றால்?? அவர் மீதான நற்பெயரை பிடுங்கி எறிய வேண்டும்... கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய வேண்டும்... அவர் ஊழல்வாதி என்று அறிவிக்க வேண்டும்... திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டும்... வழக்குகள் போட வேண்டும்... அவர் யாருக்காக போராடுகிறாரோ அந்த பிற்படுத்தப்பட்ட மக்களே அதை நம்ப வேண்டும்... நம்ப வைக்க வேண்டும்... அந்த வழக்கை வெற்றி கொண்டு அவர் மீள்வதற்குள்ளாக தேர்தல்களில் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்...இது தான் அவாள்களின் அஜெண்டா... அதைத்தான் கன கச்சிதமாக ஒவ்வொரு முறையும் நிறைவேற்றினர். அவர் கட்சியில் எம்.ஜி.ஆர், வைக்கோ போன்றவர்கள் திடீர் திடீரென வெளியேறுவார்கள்... அவர்கள் கலைஞர் மேல் ஊழல் பட்டியல் வாசிப்பார்கள். அதன் மீது வழக்கு தொடரப்படும்... கமிஷன் அமைக்கப்படும்... தேர்தல் வரும்... தோற்றுப் போவார்... ஆனால் அந்த வழக்கு அனைத்திலும் வெற்றி பெற்று கலைஞர் வெளியே வரும் போது அவர் கொள்கைகளுக்கு எதிரான... அதாவது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கும்...மீண்டும் போராடி ஆட்சிக்கு வருவார்... ஒரு சேஞ்ச்சுக்கு ஊழலுக்கு பதில் தீவிரவாத முத்திரை குத்தப்படும்... அதற்கு ஒரு கமிஷன் போடப்படும்... கட்சி முடக்கப்படும் சூழல் உருவாகும்... மீண்டும் ஆட்சி இழப்பு... வழக்கு... மீண்டு வருதல்....ஒரு கட்டத்தில் மீண்டு வந்து மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்து...,
மத்தியில் தான் கை காட்டுகின்ற அரசு அமைந்த நிலையில்... 2006ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து மண்டல் கமிஷனில் விட்டுப் போயிருந்த மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தி விட்டார் கலைஞர்....விடுவார்களா?? அவாளெல்லாம் இம்முறை இரண்டு போராட்டங்களை கலைஞருக்கு எதிராக தொடுத்தனர். தமிழக அளவிலான ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் தானே கலைஞர் தப்பித்து வருகிறார்... இந்த முறை அகில இந்திய அளவில்... இந்த அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்றெல்லாம் அறிவித்து... டீஸர் காண்பித்து.... டிரைலர் வெளியிட்டு 2ஜி படத்தை ரிலீஸ் செய்து.... அப்பாவி மக்களை வாய் பிளக்க வைத்து.... ஆட்சியில் இருந்து குப்புறத் தள்ளி ... அவருக்கு எதிராக வழக்கமான ஒரு போராட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தினாலும்...அது அவர்களுக்கு திருப்திப்படவில்லை. ஏனெனில் கலைஞரை வீழ்த்தி மட்டும் பிரயோஜனம் இல்லை. இந்த முறை இவருக்கு ஆதரவான மத்திய அரசில் மெஜாரிட்டி பலமாக இருந்ததால் இவர் விரும்பிய படி சட்டம் நிறைவேறி விட்டது. அதைத் தடுக்க வேண்டுமென்றால்... சட்டத்தின் சந்து பொந்துகளத் தான் நாட வேண்டும்... இது தான் அந்த இரண்டாவது போரட்ட தாக்குதல்.
அந்த வகையில் தான் மத்திய கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்படவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்ட கலஞர் பெற்றுத் தந்தாலும்... அதில் சில குளறுபடிகளை... அதாவது குறைந்தபட்ச நுழைவுத்தேர்வு மதிப்பெண் என்ற சீலிங் வைத்து அதை நம்மவர்கள் தாண்டாமல் பார்த்துக்கொண்டு... (ஆசிரியர் தேர்வுக்கான டெட் எக்ஸாமில் இப்பொழுது ஜெயலலிதா இங்கே செய்வது போல) தலித்துகளையும், இதர பிற்படுத்தப்பட்டவர்களையும் வழக்கம் போல மொத்தமாக அதே 20 சதவிகிதத்திற்கு உள்ளாக இருக்கும்படி தில்லாலங்கடி வேளைகளை செய்து வருகின்றனர். இதைச் சரி செய்ய வேண்டுமானால் கலைஞர் இங்கேயும் ஆட்சிக்கு வர வேண்டும்... மத்தியிலும் இவர் சொல்வதைக் கேட்கின்ற ஆட்சி அமைய வேண்டும். அது மட்டும் நடந்து விட்டால், அவாளுடைய கைவசம் இருக்கின்ற மத்திய கல்வி நிலையங்களான ஐஐடி, ஐ ஐ எம், எய்ம்ஸ், மத்திய பல்கலக் கழகங்களும், உயர்நிலை கல்வி நிலையங்கள் இப்படி அனைத்திலும் நம்மவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சா ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு அடுத்தக் கட்டமாகவும் கலைஞர் செல்ல வேண்டிய உயரமான இடம் ஒன்று இருக்கிறது....! அது தான் இந்தியாவின் பேரலல் கவர்ன்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற உச்ச நீதி மன்றம், தேர்தல் கமிஷன், சிஏஜி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புக்கள்...! அவற்றிலும் இட ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்து அனைத்து சமூகத்தினருக்கும் சமமான சமூக நீதி கிடைக்கச் செய்தால் மட்டுமே இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் கட்டமைக்கப்படும்.
இதற்கான போராட்டத்தை அகில இந்திய அளவில் முன்னெடுத்து, ஒத்த கருத்துள்ளவர்களையும், பயனாளிகளையும் ஒருங்கிணைத்து எடுத்துச்சொல்லி... மத்திய அரசினை கட்டுப்படுத்தி நிறைவேற்றிடும் தகுதி அகில இந்திய அளவில் கலைஞர் ஒருவருக்கு மட்டுமே இருக்கின்ற காரணத்தினால் தான்......ஜெயலலிதாவின் ஊழல்களுக்கு முன்னால் கண்களை மூடிக்கொண்டு.... கலைஞருக்கு எதிராக மட்டும் தொடர்ந்து ஊழல் புகார்களையும்... இன்னபிற குற்றச்சாட்டுக்களையும் ஒட்டுமொத்த உயர்ஜாதியினர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஊடகங்களும் இன்னபிற நிறுவனங்களும் (நிறுவனங்கள் என்றால் அரசுத்துறை சார்ந்தவை) தொடர்ந்து வீசி மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றன. இதன் அடிப்படையில் தான் கலைஞர் கைகளில் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் தான் அவர் பெரிய ஊழல் வாதி என்ற பிம்பம் இங்கே கட்டமைக்கப்பட்டு வருகின்றது. அதை யார் கட்டமைக்கின்றார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா தோழரே....??!!
புதுஅரக்கன்:- சாஆஆஅர்ர்ர்ர்ர்ர்ர்... இதுல இவ்ளோ இருக்கா சார்...?? நான் இப்ப என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார். கலைஞரோட போராட்டத்திற்கு நான் ஒரு அணிலாவாவது இருக்கனும் சார். ஏன்னா? இதுனால என் சந்ததிகளுக்கு தான் சார் பலன் இருக்கு...!
கிளிமூக்கு அரக்கன் :- தம்பி நீ மூனு விஷயம் பண்ணனும்...ஒன்னு... வர்ற தேர்தல்ல நீ உதயசூரியனுக்கு வாக்களிக்கனும். ரெண்டாவது.... இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத நபர்கள் பத்து பேரை திமுகவுக்கு வாக்களிக்க வைக்கும் படி மாற்றனும். மூனாவது நான் சொன்ன விசயத்தை பல பேர்கிட்ட சொல்லனும் அது போதும்...!

No comments:
Post a Comment