Friday, April 7, 2017

ஜவடேகர் "பள்ளிகள் சோறு சாப்பிட்டு போக கூடிய இடமாக உள்ளன" - என மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் .

Sivasankaran Saravanan
Via facebook
2017-04-07


1) சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது சென்னையின் ஒரு சில பள்ளிகளில் மட்டும் மதிய உணவு வழங்கப்பட்டது.

2) 1955 ல் முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர், கல்வி இலவசமாக தந்தும் ஏன் கல்வி கற்க சிறுவர்கள் வருவதில்லை என யோசித்து மதிய உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு வருகிறார்.

3) 1977ல் முதல்வரான எம்ஜியார் சத்துணவுத்திட்டம் என பெயர் மாற்றி பள்ளி நாட்களில் மட்டுமே மதிய உணவு என இருந்ததை வருடத்தின் எல்லா நாட்களிலும் மாணவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

4) பிறகு ஆட்சிப்பொறுப்பேற்ற கலைஞர் பெயருக்கு ஏற்றார் போல சத்தான உணவாக இருக்கவேண்டும் என கருதி மதிய உணவோடு முட்டையும் சேர்த்துப் போடச்செய்தார்.

5) அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சோறு முட்டையோடு சுண்டல் கலவை சாதம் தரலாம் என திட்டமிட்டார்..!

அப்படிப்பட்ட திட்டத்தைத்தான் இன்று மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் "பள்ளிகள் சோறு சாப்பிட்டு போக கூடிய இடமாக உள்ளன" - என மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் .

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் காலை கழுவி குடித்தால் கூட காவிக்கட்சிக்கு புத்தி வராது.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் கால் தூசுக்கு கூட இவர்கள் சமமாகமாட்டார்கள்..!

No comments:

Post a Comment