Saturday, April 1, 2017

ஏபிவிபி, பாஜகவின் பொய்க்குப் பதிலடி..!

ஏபிவிபி, பாஜகவின் பொய்க்குப் பதிலடி..!
'*********************************************************
ரோஹித் தலித் அல்ல என்று ஏபிவிபி, பாஜக வினர் கூறியதை மறுத்து தலித் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி சார்பில் புதுதில்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

புதன்கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னணியின் சார்பில் வி.சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்கள் கூறியதாவது:

கலப்புமணம் செய்து கொண்ட தம்பதிகளில் எவரேனும் ஒருவர் தலித்தாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலித்துகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளைஅளித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2012இல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலாவிற்கு தலித்துகளுக்கான சலுகை அளித்திருப்பது தொடர்பாக பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பிரச்சனை எழுப்பியிருந்தது. ரோஹித் வெமுலாவின் தந்தை ஒரு பிற்படுத்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றும், அவரது தாயார்தான் தலித் என்றும், எனவே ரோஹித் வெமுலாவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கான சலுகைகளைத்தான் அளித்திட வேண்டுமேயொழிய, தலித்துகளுக்கான சலுகைகளை அளிக்கக்கூடாது என்று ஏபிவிபி பிரச்சனை கிளப்பியது. இதனைத் தொடர்ந்துதான் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவிப்பணம் (ஸ்டைபெண்ட்) நிறுத்தப்பட்டது. 2012 ரமேஷ்பாய் தபாய்நாய்கா (எதிர்) குஜராத் மாநில அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பில் கலப்புமணத் தம்பதிகளின் குழந்தைகள் தலித் தாயாரால் வளர்க்கப்படுவதால், அக்குழந்தைகள் முன்னேறிய சாதியைச் சேர்ந்த தந்தைக்குப் பிறந்திருந்தபோதிலும், சமூகத்தில் தலித்துகள் அனுபவித்துவரும் அத்துணை பாகுபாடுகளுக்கும் ஆளாகிறார்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் தந்தையின்முன்னேறிய சாதி அந்தஸ்தை அக்குழந்தைகள் பெறுவதென்பதும் நடைமுறை சாத்திய மற்றதாக இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி : தீக்கதிர்

No comments:

Post a Comment