Saturday, April 1, 2017

தஞ்சை பெரிய கோவிலில் "துலக்க நாச்சியார்" என்னும் ஒரு நுழைவாசல் இருப்பதாகவும் திரு ஓசூர் ராஜன் குறிபிட்டுள்ளார்.

ஓசூர் எ.கே.ராஜன் ஒரு ஆய்வு நூலை எழுதிஉள்ளார். குந்தவை நாச்சியார் என்பதாகும். குந்தவை நாச்சியார் ராஜ ராஜ சோழனின் அக்காள் ஆவார்.

நாச்சியார் குழந்தை பருவத்தில் விளயடிக்கொண்டிறந்த போது அவர் வண்ண வண்ண பட்டாம் பூச்சிகளையும் மின்மினி பூச்சிகளையும் ஓடி ஓடி பிடித்த வண்ணம் இருக்கும் பொழுது, அவ்வழியே வந்த இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர் தப்ரே ஆலம் என்பவர் அவரை அன்புடன் அணுகி நாச்சியாரை,"மா ஜிக்னு" அதாவது மின்மினி பூச்சியின் விளையாட்டு பெண் என்று அழைக்கலானார்.

நாச்சியாரும் தபேரே ஆலம் பராமரிப்பில் வாழ்ந்து இஸ்லாமிய மார்கத்தை ஏற்று கொண்டார் என்ற செய்தியும் குறிபிட்டுள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் "துலக்க நாச்சியார்" என்னும் ஒரு நுழைவாசல் இருப்பதாகவும் திரு ஓசூர் ராஜன் குறிபிட்டுள்ளார்.

இந்த நுழைவாசல் விபரம் சபா நக்வி என்னும் ஆங்கில எழுத்தாளர் அவுட் லுக் Outlook சஞ்சிகையிலும் எழுதிஉள்ளார். திரு அகத்திய தாசன் என்னும் நூலாளர் இதனை உறுதிபடுத்தி சென்னை கே கே நகரில் பல வருடங்களாக இயங்கி வரும் இலக்கிய வாசகர் வட்டம் இதில் இந்த விபரங்களை எடுத்து உரைத்தார்.

மேலும் திருச்சியில் குந்தவை நாச்சியாரும், தாபரே ஆலம் அடங்கிய ஒரு தர்காவையும் என்னால் பார்க்க வாய்ப்பு கிட்டியது. இந்த நூல் வேண்டுவோர் ஓசூர் திரு ராஜன் அவர்களை +91 9894435327 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

-Kumaresan Asak

No comments:

Post a Comment