Saturday, April 1, 2017

ஒரு வழக்கு தொடர்பான விசாரணை முழுமையாக முடிவதற்கு முன்பே தீர்ப்பு - அதுவும் மரண தண்டனை

வழக்கு விசாரணை
இன்னும் தொடர்கிறதே...!

யாகூப் மேமனுக்கு மரண
தண்டனை அளிக்கப்பட்ட
பிறகும் மும்பை வெடிகுண்டு
வழக்கு இன்னும் தடா நீதிமன்றத்தில்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

2002ஆம் ஆண்டிற்குப் பிறகு
கைது செய்யப்பட்டவர்கள்
குறித்தான விசாரணையாம் இது.

அதாவது 2002இல் கைது
செய்யப்பட்ட அபூசலீம்,
2003இல் கைது செய்யப்பட்ட
முஸ்தபா தோஸா,
2010 இல் கைது செய்யப்பட்ட
முஹம்மத் தாஹிர் மர்ச்சண்ட்
உட்பட ஏழுக்கும் அதிகமான
பேரிடம் தடா நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

யாகூப் மேமன் தூக்கில்
ஏற்றப்பட்ட வியாழக்கிழமை கூட
விசாரணை நடந்துகொண்டு
தான் இருந்தது.

ஒரு வழக்கு தொடர்பான
விசாரணை முழுமையாக
முடிவதற்கு முன்பே தீர்ப்பு -
அதுவும் மரண தண்டனை
என்று தீர்ப்பு அளிக்க முடியுமா?

-சிராஜுல்ஹஸன்

No comments:

Post a Comment