தி.மு.க. விடுத்த ஓர் அறிக்கை
எல்லாக் கட்சிகளையும் கதிகலங்க
அல்லது விழிபிதுங்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும்
என்று கோரும் பாஜக ஆளும்
மாநிலங்களிலும் மது உண்டு,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும்
மது உண்டு. ஏன், ஆம் ஆத்மி ஆளும்
தில்லியிலும்கூட மது உண்டு.
ஆக, இது அரசியல் மட்டுமே.
கலிங்கப்பட்டியில் டாஸ்மாக்
கடை நேற்று புதிதாகத் திறந்தார்களா
என்ன... அல்லது, ரகசியமாக இயங்கிக்
கொண்டிருந்ததா... தி.மு.க. அறிவித்ததும்
மற்ற கட்சிகளுக்கு தம் இருப்பைக்
காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
பாமக பாவம். அடுத்த தேர்தலில்
எந்தக் கூட்டணியில் எங்கே சேர
வேண்டியிருக்கும் என்று
நிச்சயமில்லாததால், மதுவுக்கு
எதிரான கட்சி என்று பீற்றிக்
கொண்டிருந்தாலும் கடையடைப்புக்கு
ஆதரவு தராமல் நழுவுகிறது. அதன்
மதுவிலக்குக் கொள்கை எப்படிப்பட்டது
என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
நடந்து கொண்டிருப்பதெல்லாம்
இந்த அரசியலின் விளையாட்டுகளே.
தமிழகத்தில் எழுச்சி வந்து விட்டது,
தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்தெழப்
போகிறார்கள் என்பதெல்லாம் மாயை.
- Shah Jahan
எல்லாக் கட்சிகளையும் கதிகலங்க
அல்லது விழிபிதுங்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும்
என்று கோரும் பாஜக ஆளும்
மாநிலங்களிலும் மது உண்டு,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும்
மது உண்டு. ஏன், ஆம் ஆத்மி ஆளும்
தில்லியிலும்கூட மது உண்டு.
ஆக, இது அரசியல் மட்டுமே.
கலிங்கப்பட்டியில் டாஸ்மாக்
கடை நேற்று புதிதாகத் திறந்தார்களா
என்ன... அல்லது, ரகசியமாக இயங்கிக்
கொண்டிருந்ததா... தி.மு.க. அறிவித்ததும்
மற்ற கட்சிகளுக்கு தம் இருப்பைக்
காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
பாமக பாவம். அடுத்த தேர்தலில்
எந்தக் கூட்டணியில் எங்கே சேர
வேண்டியிருக்கும் என்று
நிச்சயமில்லாததால், மதுவுக்கு
எதிரான கட்சி என்று பீற்றிக்
கொண்டிருந்தாலும் கடையடைப்புக்கு
ஆதரவு தராமல் நழுவுகிறது. அதன்
மதுவிலக்குக் கொள்கை எப்படிப்பட்டது
என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
நடந்து கொண்டிருப்பதெல்லாம்
இந்த அரசியலின் விளையாட்டுகளே.
தமிழகத்தில் எழுச்சி வந்து விட்டது,
தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்தெழப்
போகிறார்கள் என்பதெல்லாம் மாயை.
- Shah Jahan
No comments:
Post a Comment