Saturday, April 1, 2017

திமுக ஆட்சியை கேப்டன் விமர்சித்தால் அதை "தன்னிகரற்ற தைரியம்" என்று சர்டிபிகேட் கொடுக்க வேண்டியது.

திமுக ஆட்சியை கேப்டன் விமர்சித்தால் அதை "தன்னிகரற்ற தைரியம்" என்று சர்டிபிகேட் கொடுக்க வேண்டியது.

அதையே அம்மையாருக்கு எதிரான கேப்டன் பேசினால் குடிகாரன், இன்னும் கொஞ்சம் பொறுமை இருந்திருக்கலாம், அன்பா பேசியிருக்கலாம் என்ற வியாக்கியானம் வருகிறது.

சற்றே சிந்தித்துப் பார்த்தால் ஆவடி குமார் பேசும் அடாவடி அபத்தங்கள், சீமான் அண்ட் அய்யநாதன் பேசும் இனத்துவேஷ பேச்சுக்கள், சு.சாமி, எச்.ராஜா போன்ற சொம்பைகள் பேசும் கருத்துக்களைப் பற்றி கேட்டால் ஒரு மாநிலத் தலைவர் என்ற பொறுப்பே இல்லாமல் " அது அவர்கள் சொந்தக் கருத்து " என் எஸ்கேப் ஆகும் தமிழசை, ஹிந்துத்துவத்தின் படையெடுப்பு என்று ஏதோ ஒரு பெயரில் யார் எழுதியது என்றே தெரியாத ஒரு நூலைக் காட்டும் பாண்டே ,ராகவன், கழுதைக்கு தாலி கட்டும் ராமகோபாலன் அண்ட் கோ பேசும் பேச்சுக்கள் , perverse sense என்று எழுதும் இணைய அறிவு ஜீவிகள் பெரியாரை ஆபாசமாக வறுத்தெடுக்கும் எழுத்தாள முட்டாக் , முட்டாப் , லூசுக் , அல்லப் ....கள் என சைலண்டான முறையில் போக்கிரித்தனம் செய்யும் ஆட்கள் மத்தியில் கேப்டன் வெளிப்படையாக outburst ஆவதெல்லாம் தப்பாகவே தெரியவில்லை.

திரும்பத் திரும்ப Provoke செய்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் அமைதியாய் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய தேவை யாருக்குமே இருப்பதாக தெரியவில்லை. விமான நிலையத்தில் கேப்டனை வெளிப்படையாக டேய்- டோய் ** என்று ஒரு ஜெயா டிவிக்காரர் திட்டியபோது வராத வியாக்கியானங்கள் கேப்டன் ரெண்டு எகிறு எகிறினால் வருவது வேடிக்கையாக இருக்கிறது.

-UmamaheshVaran Lao Tsu's

No comments:

Post a Comment