Saturday, April 1, 2017

திராவிடர் என்று கேரளா கர்நாடக ஆந்திர காரன் யாரூமே சொல்லலியே ஏன்?

திராவிடர் என்று கேரளா
கர்நாடக ஆந்திர காரன்
யாரூமே சொல்லலியே ஏன்?
- ஆர்வக்கோளாறுகள்..

தமிழ்தான் திராவிடமொழியில்
மூத்த மொழி, அதிலிருந்து
தான் நமது மொழியான
கன்னடம், மலையாளம் போன்ற
மொழிகள் தோன்றின எனபதை
அவன் ஏற்றுக் கொண்டால்,
நாம் தமிழருக்கு கீழ்தான்
என்ற உண்மையை அவன்
ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்.

அப்படி ஏற்றுக்கொள்வதை
அவன் தனக்கு ஏற்பட்ட
அவமானமாக கருதுகிறான்.
அதனால்தான் அவன்
திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவன் ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்கு அவன் தரப்பில்
நியாயமான காரணம் இருக்கிறது.

ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்கு சாதி வெறியை
தவிர, வேறு என்ன இருக்கிறது.

ஆதலால் நான் திராவிடன்
என்று சொல்வது தமிழர்களான
நமக்கு பெருமையே தவிர,
எக்காலத்திலும் சிறுமை இல்லை.

ஆதலால் நான் திமிருடன்
சொல்வேன், "நான் திராவிடனென்று"

-திராவிடப் புலி

No comments:

Post a Comment