இனவாதம் , சாதிப்பெருமை, Phylogenetic
analysis of caste பேசும் அன்புமணி போன்ற
ஆட்கள் எப்படி வெக்கமே இல்லாமல்
Anbumani for 4 CM என்று பேசமுடிகிறது
என்று தெரியவில்லை. ஒருவேளை
முதல்வர் என்ற பதவி சாதி சங்கங்களுக்கு
மட்டும் தலைவராக இருப்பதால்
கிடைக்கக்கூடியதா என்ன ? .
எனது சாதி மட்டுமே உயர்ந்தது,
பிறிதெல்லாம் கேவலபட்ட சாதிகள் என்று
நேரடியாகவும் மறைமுகமாகவும் பல
சந்தர்ப்பங்களில் பேசிவரும் கட்சி ,
சாதீய படுகொலைகளை கவுரவக்
கொலைகள் என்று oxymoronனாக
குறிப்பிடும் Moron கள் நிறைந்த கட்சி ,
இனக்கலப்பு என்பது சாதிக்கு ஏற்பட்ட
அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக
முன்மொழியும் கட்சி நூற்றுக்கும்
அதிகமான சாதிகள் இருக்கும் மாநிலத்தை
ஆளப்போகிறோம் என்று சொல்வது ,
ஆமாடா நாங்க தான் உங்களை ஆள
வேண்டியவர்கள் என்று பிற சாதிகளுக்கு
விடும் நேரடி நக்கல் என்று எடுத்துக்
கொள்ளலாமா ?
தங்கள் சாதி ஆட்கள் அதிகம்
இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டை
இரண்டாக பிரிக்கவேண்டும் என்றெல்லாம்
உளறிக்கொட்டிய கட்சி எந்த அடிப்படையில்
இப்படி ஆட்சி அமைப்போம் என்று
சொல்கிறது ?
சாதீய படுகொலைகளை தற்கொலைகள்
என்று சொல்லும் வேடதாரிகள், என்
இனத்துப் பெண்கள் வேறு இனத்து
ஆட்களை மணந்தால் அவர்களையும்
வெட்டுவோம் என்று கொக்கரிக்கும்
ஆட்கள் , இங்கே எவன் செத்தாலும் கவலை
இல்லை ஈழத்தில் செத்தவனுக்கு மட்டுமே
என் ஒப்பாரி என கள்ள மவுனம் காக்கும்
ஆட்கள், பிராமணனை மட்டும் திட்டிவிட்டு
மாணவர்கள் மத்தியில் பரவும் சாதிக்
கயறு கலாசாரத்தை கண்டுக்க வக்கு
இல்லாதவர்கள் , இவர்கள் எல்லாம் தான்
தனி தமிழ்நாடு வேண்டும் என்று அடம்
பிடிப்பவர்கள்.
கூட்டு முயற்சியாக உருவெடுக்கவேண்டிய
தனி தமிழ்நாட்டு முன்னெடுப்புகள்
எல்லாவற்றிற்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக
இருக்கும் இவர்கள் , இவர்களது சாதி
வெறி அடியாட்கள் எல்லாரும் ஒருமித்த
குரலில் " தனி தமிழ்நாடு வேண்டும்" என்று
சொல்வது சமீபத்திய காலத்தின் ஆகச்
சிறந்த நகைமுரண்.
"தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்"
என்ற கோஷத்தில் இருக்கும் சுருதி
குறைந்து தமிழ்நாட்டை வன்னியன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை தேவன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை நாடார் ஆள
வேண்டும் என்று திரிந்துபோவது கண்கூடு.
உண்மையில் தமிழன் என்ற சொல்
அர்த்தமற்றுப் போகும் அளவுக்கு இந்த
சாதி மட்டுமே தமிழன் என்ற வரையறையை
இத்தகைய ஆட்கள் தொடந்து முன்வைத்து
வருகிறார்கள்.இவர்கள் பேசும் தமிழ்
தேசியமானது , பார்ப்பனீயத்தை எல்லாம்
விஞ்சும் சாதிவெறி உணர்வு என்பது
நனிவிளங்கும்.
இத்தகைய குறுநில ரவுடிகளிடம் இருந்து
தப்பிக்க, இந்தியா எனும் பெரிய
தாதாவிடம் இருப்பதுதான் இப்போதைக்கு
தமிழ்நாட்டுக்கு நல்லது.
-UmamaheshVaran Lao Tsu
analysis of caste பேசும் அன்புமணி போன்ற
ஆட்கள் எப்படி வெக்கமே இல்லாமல்
Anbumani for 4 CM என்று பேசமுடிகிறது
என்று தெரியவில்லை. ஒருவேளை
முதல்வர் என்ற பதவி சாதி சங்கங்களுக்கு
மட்டும் தலைவராக இருப்பதால்
கிடைக்கக்கூடியதா என்ன ? .
எனது சாதி மட்டுமே உயர்ந்தது,
பிறிதெல்லாம் கேவலபட்ட சாதிகள் என்று
நேரடியாகவும் மறைமுகமாகவும் பல
சந்தர்ப்பங்களில் பேசிவரும் கட்சி ,
சாதீய படுகொலைகளை கவுரவக்
கொலைகள் என்று oxymoronனாக
குறிப்பிடும் Moron கள் நிறைந்த கட்சி ,
இனக்கலப்பு என்பது சாதிக்கு ஏற்பட்ட
அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக
முன்மொழியும் கட்சி நூற்றுக்கும்
அதிகமான சாதிகள் இருக்கும் மாநிலத்தை
ஆளப்போகிறோம் என்று சொல்வது ,
ஆமாடா நாங்க தான் உங்களை ஆள
வேண்டியவர்கள் என்று பிற சாதிகளுக்கு
விடும் நேரடி நக்கல் என்று எடுத்துக்
கொள்ளலாமா ?
தங்கள் சாதி ஆட்கள் அதிகம்
இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டை
இரண்டாக பிரிக்கவேண்டும் என்றெல்லாம்
உளறிக்கொட்டிய கட்சி எந்த அடிப்படையில்
இப்படி ஆட்சி அமைப்போம் என்று
சொல்கிறது ?
சாதீய படுகொலைகளை தற்கொலைகள்
என்று சொல்லும் வேடதாரிகள், என்
இனத்துப் பெண்கள் வேறு இனத்து
ஆட்களை மணந்தால் அவர்களையும்
வெட்டுவோம் என்று கொக்கரிக்கும்
ஆட்கள் , இங்கே எவன் செத்தாலும் கவலை
இல்லை ஈழத்தில் செத்தவனுக்கு மட்டுமே
என் ஒப்பாரி என கள்ள மவுனம் காக்கும்
ஆட்கள், பிராமணனை மட்டும் திட்டிவிட்டு
மாணவர்கள் மத்தியில் பரவும் சாதிக்
கயறு கலாசாரத்தை கண்டுக்க வக்கு
இல்லாதவர்கள் , இவர்கள் எல்லாம் தான்
தனி தமிழ்நாடு வேண்டும் என்று அடம்
பிடிப்பவர்கள்.
கூட்டு முயற்சியாக உருவெடுக்கவேண்டிய
தனி தமிழ்நாட்டு முன்னெடுப்புகள்
எல்லாவற்றிற்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக
இருக்கும் இவர்கள் , இவர்களது சாதி
வெறி அடியாட்கள் எல்லாரும் ஒருமித்த
குரலில் " தனி தமிழ்நாடு வேண்டும்" என்று
சொல்வது சமீபத்திய காலத்தின் ஆகச்
சிறந்த நகைமுரண்.
"தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்"
என்ற கோஷத்தில் இருக்கும் சுருதி
குறைந்து தமிழ்நாட்டை வன்னியன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை தேவன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை நாடார் ஆள
வேண்டும் என்று திரிந்துபோவது கண்கூடு.
உண்மையில் தமிழன் என்ற சொல்
அர்த்தமற்றுப் போகும் அளவுக்கு இந்த
சாதி மட்டுமே தமிழன் என்ற வரையறையை
இத்தகைய ஆட்கள் தொடந்து முன்வைத்து
வருகிறார்கள்.இவர்கள் பேசும் தமிழ்
தேசியமானது , பார்ப்பனீயத்தை எல்லாம்
விஞ்சும் சாதிவெறி உணர்வு என்பது
நனிவிளங்கும்.
இத்தகைய குறுநில ரவுடிகளிடம் இருந்து
தப்பிக்க, இந்தியா எனும் பெரிய
தாதாவிடம் இருப்பதுதான் இப்போதைக்கு
தமிழ்நாட்டுக்கு நல்லது.
-UmamaheshVaran Lao Tsu
No comments:
Post a Comment