Saturday, April 1, 2017

வர்க்கத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே தட்டில் நிறுத்தி விவாதிக்க முடியாது

சாதியும், வர்க்கமும்

“பொருளாதாரத்தால்,
சமூகத்தால், சாதிப்பிரிவால்
ஒடுக்கப்படும் எல்லோருமே
தலித்துகள்தானே?”

சட்டென்று வாசிக்கும்போது
‘சரிதானே?’ என்று தோன்றக்கூடும்.
இப்படித்தான் இங்கே வெகுஜன
கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் பிரச்சாரம்
செய்து வருகின்றன.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால்
இதில் சாதியும், வர்க்கமும்
ஒரே பிரச்சினை என்கிற தொனி
இருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம்.
இரண்டும் சர்வநிச்சயமாக வேறு, வேறு.

வர்க்க வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட
ஒருவன், தன்னளவில்
நேர்மையாகவோ அல்லது
அநியாயமாகவோ எப்படியோ
பொருள்சேர்த்து தன்னுடைய
வர்க்கத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் பொருள் சேர்ப்பதால் மட்டும்
ஒரு தலித் தன் மேல் சுமத்தப்பட்ட
சாதிய இழிவை துடைத்துக்கொள்ளவே
முடியாது என்பதுதான் இங்கே
யதார்த்தம்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக
உயர்ந்த ஒருவர் கூட, மற்றைய
உயர்சாதி நீதிபதிகளால்
அவமானப்படுத்தப்படுவது என்பது
இங்கே நடைமுறை.

நாட்டுக்கே குடியரசுத்தலைவராக
தலித் உயர்ந்திருந்தாலும், ஒரு சாதாரண
கோயில் கும்பாபிஷேகத்தில் கூட
கோபுரத்தில் அமரமுடியாது
என்பதுதான் நிதர்சனம்.

எனவே வர்க்கத்தையும், சாதிய
ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே தட்டில்
நிறுத்தி விவாதிக்க முடியாது.

நன்றி : யுவகிருஷ்ணா

No comments:

Post a Comment