Saturday, April 1, 2017

சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்

சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்

இந்த இயக்கமானது எப்போதும், பார்ப்பனரையும், பண்டிதரையும், மதத்தையும், சாமியையும், கண்டித்துக் கொண்டு, மூடப்பழக்கங்களை, பரிகாசம் செய்து கொண்டு இருக்கும் என்றோ, அல்லது இவை ஒழிந்தவுடன் இந்த இயக்கத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதி விடக் கூடாது,,

மேற்சொன்னவை ஒழிவதோடு,,

ஒருவன் உழைப்பில் மற்றவன் நோகாமல் சாப்பிடும் தன்மை இருக்கும் வரையில்,

ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் ஒருவன் பட்டினி கிடந்து சாவதும், மற்றவன் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு, வயிற்றைத் தடவிக் கொண்டு இருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும்,

ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவது, மற்றவன் மூன்று வேட்டி கட்டிக் கொண்டு உல்லாசமாய் திரிகிற போக்கு உள்ளவரை,,

பணக்காரர்கள் எல்லாம், தங்களது செல்வம் முழுதும் தங்களது சுகவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டு இருக்கிற தன்மை இருக்கின்ற வரையில்,,

சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்,,

--அறிவுலக ஆசான் பெரியார்

No comments:

Post a Comment